மயிலை திருவாசகப் பேரவையும், ஸ்ரீ அன்னபூரணி யாத்ரா சர்வீசும் இணைந்து நடத்தும்

கைலாஷ்-மானஸரோவர், முக்திநாத் யாத்ரா - 2019

ஜுலை மாத பௌர்ணமி புனித யாத்திரையின் விமான திருப்பயண விவரம் 07.07.2019 - 22.07.2019

முக்திநாதன் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசாளக்கிராம திருப்பயண விவரம்

07-07-19 சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி அடைந்து, பின்பு அங்கிருந்து விமானம் மூலம் காட்மண்டு சென்றடைதல், அங்கு அடியார்களுக்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின், முக்திநாத் திருப்பயணத்திற்கு தயாராகி இரவு தங்குதல்.
08-07-19 அதிகாலை சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் புறப்பட்டு முக்திநாத் செல்லும் வழியில் மனக்கமனா பகவதி தேவியை கேபிள் கார் மூலம் சென்று தரிசித்தபின் போக்ரா அடைந்து லேக் வியூவில் உள்ள ஹோட்டலில் இரவு தங்குதல்.
09-07-19 போக்ராவில் அதிகாலையில் ஸ்ரீ அன்னபூர்ணா சூரிய தரிசனத்திற்குபின் விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் ஜோம்சோம் அடைந்து, பின் அங்கிருந்து ஜீப்பில் பயணித்து வழியில் கண்டகி நதி, ஸ்ரீசாளக்கிராம தரிசனத்திற்குபின் முக்திநாத் கோயில் அடைதல், அங்கு 108 தீர்த்தங்கள் மற்றும் பாவ, புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, அடியார்களின் சுதர்சன ஹோமத்திற்குப்பின் வேதகோஷங்கள் முழங்க முக்திநாராயணன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரங்கள் அணிவித்தல். அதன்பின் ஸ்ரீ ராமானுஜரின் 1002வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு அடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ‘ஓம் நமோ நாராயணாய’ நாம ஜப வேள்வியும், ஹரி நாம ஸங்கீர்த்தனமும் மற்றும் சங்கீத உபன்யாசமும் வெகுவிமர்சையாக நடைபெறும். அடியார்கள் சார்பாக லட்ச தீபம் ஏற்றி முக்திநாதனை வழிபட்டபின் சாளகிராமம் பற்றி திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி கூட்டு பாராயணம் நடைபெறும். பின்பு அவரவர் வேண்டுதலுக்கேற்ப கோவிலில் மணி கட்டி வழிபடுதல். அதன்பின் அனைத்துவிதமான சாளகிராம மூர்த்திகளை கொண்டுள்ள திருக்கோயில், புத்தர் சிலை, ஜ்வாலாமுகியை (அணையா ஜோதி) தரிசித்து பின் ஜீப் மூலம் ஜோம்சோம் அடைந்து இரவு தங்குதல்.
10-07-19 Ø அதிகாலை ஜோம்சோமிலிருந்து விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் போக்ரா அடைந்து, அங்குள்ள டேவிஸ் பால்ஸ், ஃபீவா லேக் பார்த்தபின் பிந்துவாசினி, லேக்வராகி கோயில் மற்றும் குப்தேஸ்வர் குகை கோயில் தரிசனம் செய்து, பின்பு அங்கிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் காட்மண்டு அடைந்து இரவு தங்குதல். இங்கு அடியார்களுக்கு வைணவமணி சான்றிதழ் வழங்கி கௌரவித்தல். மேலும் தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்தளித்தல்.
Ø கைலாஷ்-மானஸரோவர் யாத்திரையில் மட்டும் கலந்துகொள்ளும் சிவனடியார்கள் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி அடைந்து, பின்பு அங்கிருந்து விமானம் மூலம் காட்மண்டு சென்றடைதல். அடியார்களுக்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்குபின் இரவு தங்குதல்.
11-07-19 Ø அதிகாலையில் சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் பசுபதிநாதர் கோயில் சென்றடைந்து அங்கு பசுபதிநாதருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திற்குபின் அவரவரர் பிரார்த்தனைகளுக்கேற்ப தீபம் ஏற்றுதல். பின்பு முக்கிய ஸ்தலங்களான புத்த நீல்கண்ட் (ஜலநாராயணன்), சுயம்புநாத், குக்கேஸ்வரி சக்தி பீடம் மற்றும் புனித நதியான பாக்மதி நதி தரிசனம் செய்தல்.
Ø அன்று மாலை கைலாஷ்-மானஸரோவர் யாத்திரையில் கலந்துகொள்ளும் சிவனடியார்களின் அறிமுக நிகழ்ச்சிக்குபின் கைலாஷ்- மானஸரோவர் புனித யாத்திரை பற்றி விரிவாக கலந்துரையாடி, திருப்பயணத்திற்கு தயாராகி இரவு தங்குதல்.
12-07-19 முக்திநாத் யாத்திரையில் மட்டும் கலந்துகொண்ட அடியார்கள் ஸ்ரீசாளகிராமத்தில் முக்திநாதன் புனிதமாக உறைந்திருப்பதை நேரில் கண்டு தரிசித்த ஆனந்தத்துடன் அவரவர் இல்லம் திரும்புதல்.
மெய்சிலிர்க்கும் காட்சிகளும், தெய்வீக ஈர்ப்பு சக்தியும் எங்கும் நிறைந்த கைலாஷ் மற்றும் மானஸரோவர் திருப்பயண விவரம்
12-07-19 அதிகாலை காட்மண்டுவிலிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் நேபாள் எல்லையான Syaprobesi அடைதல், மாலை அடியார்களின் தேவாரம் முற்றோதல் நிகழ்ச்சிக்குபின் இரவு தங்குதல் (Syaprobesi for acclimatization).
13-07-19 மதிய உணவிற்குபின் Syaprobesi--லிருந்து நடைபயணமாக புறப்பட்டு அருகில் உள்ள நேபாள் எல்லையை அடைந்து அங்கு பாஸ்போர்ட் மற்றும் விசா பரிசீலனைக்குபின் பிரெண்ட்ஷிப் பிரிட்ஜில் நடந்து சீன எல்லையை அடைந்து மீண்டும் பாஸ்போர்ட் மற்றும் விசா பரிசீலனை முடிந்தப்பின் Kyirong அடைதல். மாலை அடியார்களின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சிக்குபின் இரவு தங்குதல்.
14-07-19 Kyirong-லிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் Saga சென்றடைதல், மாலை அடியார்களின் சிவபுராணம் முற்றோதலுக்குபின் Saga-வில் இரவு தங்குதல்
15-07-19 அதிகாலை Saga-விலிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் மானஸரோவர் செல்லும்வழியில் கார்த்திகேயன் பிறந்த இடமான குர்லா மாந்தாதா மலையையும், கார்த்திகேயன் நீராடிய சரவண பொய்கையையும் தரிசித்தபின் மானஸரோவர் வந்தடைந்து இரவு தங்குதல். மாலை நடைபெறும் திருக்கயிலாய போற்றித் திருத்தாண்டகத்திற்குபின் இரவு பிரம்ம முகூர்த்தத்தில் சிவஜோதியை (தேவர்களை) கண்டு தரிசித்தல், மேலும் ஒளிரூபமாக பார்வதி பரமேஸ்வரன் நமக்கு காட்சி அளிப்பதை நேரில் கண்டு அளவற்ற ஆனந்தம் அடைதல்.
16-07-19 ஜுலை மாத பௌர்ணமி அன்று அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த அனைத்தையும் குணமளிக்கும் சக்தி நிறைந்த மானஸரோவர் தடாகத்தில் புனித நீராடி அல்லது ப்ரோச்சனம் செய்து, பார்வதி தேவிக்கு பூஜை செய்து, மானஸரோவர் கரையில் சிவனடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் சிறப்பு ஹோமம் திருமுறையின்படி நடைபெறும். அதன்பின் மூர்த்தங்கள், புனித நீர், மணல் எடுத்தல். மேலும் மானஸரோவர் கரையில் பார்வதி தேவிக்கு தீபம் ஏற்றி வழிபட்டபின் அடியார்கள் தங்களின் பிரார்த்தனைகளை அவரவர் விருப்பபடி நிறைவேற்றுதல். மானஸரோவர் தடாகத்தில் காணக்கிடைக்காத தேவ தேவதைகள் புனித நீராடுவதையும், பொன்னிற அன்னங்களையும் நாம் கண்டு தரிசிப்பதன் மூலம் உடல், மனம் சார்ந்த என்னற்ற அரிய பலன்களை இங்கு நீங்கள் உணரலாம். மானஸரோவரில் தாங்கள் கண்ட அதிசயங்கள் மற்றும் தங்களுக்கு அதிஅற்புதமாக கிடைத்த தரிசனத்தின் பேரானந்தத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் தார்ச்சன்கேம்ப் (கயிலையின் அடிவாரம்) சென்றடைந்து இரவு தங்குதல்.
17-07-19 முதல் நாள்: அதிகாலை சிவநமஸ்காரம் எனும் யோகபயிற்சிக்குபின் தார்ச்சன் கேம்ப்பிலிருந்து புறப்பட்டு அஷ்ட பர்வத், நந்தி பர்வத் (8 மலைகளுக்கு இடையே சிவனையும் நந்தியையும்) சென்று தரிசித்தல் (அனுமதியை பொருத்தே தரிசனம்). அதன்பின் நடைபயணமாக கிரிவலம் சென்று திரபுக் கேம்ப்பில் (வடக்கு முகத்தில்) இரவு தங்குதல்.
18-07-19 இரண்டாம் நாள்: அதிகாலை தேவ தேவர்கள் வலம் வந்துகொண்டும், ரிஷிகள் தவம் செய்துகொண்டும், சித்தர்களும் ஞானிகளும் வாழ்ந்துகொண்டும் இருக்கும் திரபுக் கேம்ப்பில் பொன்னார்மேனியனை (சுயம்பு லிங்கம்) தரிசனம் செய்தபின், அடியார்கள் அவரவர் பிரார்த்தனைக்கேற்ப ஸ்படிக லிங்கத்தை பொன்னார்மேனியனின் திருவடியில் சமர்பித்தல். மேலும் சூலாயுதம் ஊன்றி ஜோதியோடு ஜோதியாகும் பொன்னார்மேனியனுக்கு அகண்ட தீபம் (மகாதீபம்) ஏற்றி வழிபடுதல். இங்கு கண்கொள்ளா காட்சியாக ஒளிப்பிழம்பு உலகாள்வதையும், மஹாலிங்கம் பொன்னிறமாக மாறுவதையும் நாம் கண்டு தரிசிக்கலாம். மேலும் இங்கு விநாயகரை பிரதிஷ்டை செய்தபின், நடைபயணமாக கிரிவலம் செல்லும் வழியில் பார்வதி தேவி தவம் செய்த இடமான டோல்மாபாஸில் பார்வதிதேவியின் தரிசனம் கண்டபின் சிவகொடி (பிரார்த்தனை கொடி) ஏற்றி வழிபாடு செய்து, பார்வதி தேவி சிவபூஜைக்கு தீர்த்தம் எடுத்துச் சென்ற கௌரி குண்டத்தில் தீர்த்தம் எடுத்து, கிரிவலத்திற்குபின் ஜுதுல்புக் கேம்பில் இரவு தங்குதல்.
19-07-19 மூன்றாம் நாள்: அதிகாலை ஜுதுல்புக் கேம்ப்பிலிருந்து நடைபயணமாக புறப்பட்டு தார்ச்சன்கேம்ப் அடைந்து கிரிவலத்தை (பரிக்கிரமா) நிறைவு செய்தல். கிரிவலம் சென்றுவந்த சிவனருட் செல்வர்களை வணங்கி வரவேற்று, அவர்களுக்கு பாதபூஜை செய்து சிறப்பு விருந்தளித்தல். பின்பு அங்கிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் Saga சென்றடைந்து தங்குதல்.
20-07-19 Saga-விலிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் Syaprobesi சென்றடைந்து இரவு தங்குதல்.
21-07-19 அதிகாலை Syaprobesi-லிருந்து புறப்பட்டு பாஸ்போர்ட் மற்றும் விசா பரிசீலனைக்குபின் சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் காட்மாண்டு வந்தடைதல். அன்று இரவு நடைபெறும் திருக்கயிலாய யாத்திரை நிறைவு விழாவில் ‘சிவாயநம’ எனும் ஐந்தெழுத்துப் பெருவேள்வியுடன் கயிலைமணி சான்றிதழ் வழங்கி கௌரவித்தல். மேலும் தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்து அளித்தல்.
22-07-19 கயிலைநாதனும் பார்வதிதேவியும் தங்களின் இல்லத்திலும் இதயத்திலும் நிரந்தரமாக குடிவந்த பேரானந்தத்துடன் அவரவர் இல்லம் திரும்புதல்.
   
ஜுலை மாத பௌர்ணமி புனித யாத்திரையின் ரயில் திருப்பயண விவரம் 03.07.2019 - 26.07.2019

முக்திநாதன் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசாளக்கிராம திருப்பயண விவரம்

03-07-19 சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலம் டெல்லி புறப்படுதல்.
04-07-19 ரயில் பயணம்.
05-07-19 டெல்லி அடைந்து ஹோட்டலில் தங்குதல், பின்பு அவரவர் விருப்பம்போல் முக்கிய கோயில்களை தரிசித்தல் அல்லது ஓய்வெடுத்தல்.
06-07-19 அதிகாலை டெல்லியிலிருந்து ஏசி ஹைடெக் பஸ் மூலம் காட்மண்டு புறப்படுதல்.
07-07-19 காட்மண்டு அடைந்தவுடன் அங்கு சிவனருட் செல்வர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் இரவு தங்குதல்.
08-07-19 அதிகாலை சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் புறப்பட்டு பசுபதிநாதர் கோயில் சென்றடைந்து அங்கு பசுபதிநாதருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திற்குபின் அவரவர் பிரார்த்தனைகளுக்கேற்ப தீபம் ஏற்றுதல். அதன்பின் ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யாஅவர்கள் வேத வித்வான்கள் குழுவினர்களுடன், தங்களின் முக்திநாத் மற்றும் கைலாஷ் யாத்திரை தரிசனம் சிறப்புடன் நடைபெற ஹோமம் நடத்தி யாத்ரா தானம் செய்து, சிறப்புரையாற்றி ஒவ்வொரு அடியாருக்கும் ருத்ராட்சம்/துளசி மாலை மற்றும் இரட்சை அணிவித்து ஆசி வழங்குவார். அதன்பின் முக்திநாத் செல்லும் வழியில் மனக்கமனா பகவதி தேவியை கேபிள் கார் மூலம் சென்று தரிசித்தபின் போக்ரா அடைந்து லேக் வியூவில் உள்ள ஹோட்டலில் இரவு தங்குதல்.
09-07-19 போக்ராவில் அதிகாலையில் ஸ்ரீ அன்னபூர்ணா சூரிய தரிசனத்திற்குபின் விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் ஜோம்சோம் அடைந்து, பின் அங்கிருந்து ஜீப்பில் பயணித்து வழியில் கண்டகி நதி, ஸ்ரீசாளக்கிராம தரிசனத்திற்குபின் முக்திநாத் கோயில் அடைதல், அங்கு 108 தீர்த்தங்கள் மற்றும் பாவ, புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, அடியார்களின் சுதர்சன ஹோமத்திற்குப்பின் வேதகோஷங்கள் முழங்க முக்திநாராயணன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரங்கள் அணிவித்தல். அதன்பின் ஸ்ரீ ராமானுஜரின் 1002வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு அடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ‘ஓம் நமோ நாராயணாய’ நாம ஜப வேள்வியும், ஹரி நாம ஸங்கீர்த்தனமும் மற்றும் சங்கீத உபன்யாசமும் வெகுவிமர்சையாக நடைபெறும். அடியார்கள் சார்பாக லட்ச தீபம் ஏற்றி முக்திநாதனை வழிபட்டபின் சாளகிராமம் பற்றி திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி கூட்டு பாராயணம் நடைபெறும். பின்பு அவரவர் வேண்டுதலுக்கேற்ப கோவிலில் மணி கட்டி வழிபடுதல். அதன்பின் அனைத்துவிதமான சாளகிராம மூர்த்திகளை கொண்டுள்ள திருக்கோயில், புத்தர் சிலை, ஜ்வாலாமுகியை (அணையா ஜோதி) தரிசித்து பின் ஜீப் மூலம் ஜோம்சோம் அடைந்து இரவு தங்குதல்.
10-07-19 Ø அதிகாலை ஜோம்சோமிலிருந்து விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் போக்ரா அடைந்து, அங்குள்ள டேவிஸ் பால்ஸ், ஃபீவா லேக் பார்த்தபின் பிந்துவாசினி, லேக்வராகி கோயில் மற்றும் குப்தேஸ்வர் குகை கோயில் தரிசனம் செய்து, இரவு போக்ராவில் தங்குதல் அல்லது சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் காட்மண்டு அடைந்து இரவு தங்குதல். இங்கு அடியார்களுக்கு வைணவமணி சான்றிதழ் வழங்கி கௌரவித்தல். மேலும் தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்தளித்தல்.
Ø கைலாஷ்-மானஸரோவர் யாத்திரையில் மட்டும் கலந்துகொள்ளும் சிவனடியார்கள் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி அடைந்து, பின்பு அங்கிருந்து விமானம் மூலம் காட்மண்டு சென்றடைதல். அடியார்களுக்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்குபின் இரவு தங்குதல்.
11-07-19 Ø அதிகாலையில் சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் பசுபதிநாதர் கோயில் சென்றடைந்து அங்கு பசுபதிநாதருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திற்குபின் அவரவரர் பிரார்த்தனைகளுக்கேற்ப தீபம் ஏற்றுதல். பின்பு முக்கிய ஸ்தலங்களான புத்த நீல்கண்ட் (ஜலநாராயணன்), சுயம்புநாத், குக்கேஸ்வரி சக்தி பீடம் மற்றும் புனித நதியான பாக்மதி நதி தரிசனம் செய்தல்.
Ø அன்று மாலை கைலாஷ்-மானஸரோவர் யாத்திரையில் கலந்துகொள்ளும் சிவனடியார்களின் அறிமுக நிகழ்ச்சிக்குபின் கைலாஷ்- மானஸரோவர் புனித யாத்திரை பற்றி விரிவாக கலந்துரையாடி, திருப்பயணத்திற்கு தயாராகி இரவு தங்குதல்.
12-07-19 முக்திநாத் யாத்திரையில் மட்டும் கலந்துகொண்ட அடியார்கள் முக்திநாதனை நேரில் கண்டு தரிசித்த ஆனந்தத்துடன் அவரவர் இல்லம் திரும்புதல்
மெய்சிலிர்க்கும் காட்சிகளும், தெய்வீக ஈர்ப்பு சக்தியும் எங்கும் நிறைந்த கைலாஷ் மற்றும் மானஸரோவர் திருப்பயண விவரம்
12-07-19 அதிகாலை காட்மண்டுவிலிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் நேபாள் எல்லையான Syaprobesi அடைதல், மாலை அடியார்களின் தேவாரம் முற்றோதல் நிகழ்ச்சிக்குபின் இரவு தங்குதல் (Syaprobesi for acclimatization).
13-07-19 மதிய உணவிற்குபின் Syaprobesi-லிருந்து நடைபயணமாக புறப்பட்டு அருகில் உள்ள நேபாள் எல்லையை அடைந்து அங்கு பாஸ்போர்ட் மற்றும் விசா பரிசீலனைக்குபின் பிரெண்ட்ஷிப் பிரிட்ஜில் நடந்து சீன எல்லையை அடைந்து மீண்டும் பாஸ்போர்ட் மற்றும் விசா பரிசீலனை முடிந்தப்பின் Kyirong அடைதல். மாலை அடியார்களின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சிக்குபின் இரவு தங்குதல்.
14-07-19 Kyirong-லிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் Saga சென்றடைதல், மாலை அடியார்களின் சிவபுராணம் முற்றோதலுக்குபின் Saga-வில் இரவு தங்குதல்
15-07-19 அதிகாலை Saga-விலிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் மானஸரோவர் செல்லும்வழியில் கார்த்திகேயன் பிறந்த இடமான குர்லா மாந்தாதா மலையையும், கார்த்திகேயன் நீராடிய சரவண பொகையையும் தரிசித்தபின் மானஸரோவர் வந்தடைந்து இரவு தங்குதல். மாலை நடைபெறும் திருக்கயிலாய போற்றித் திருத்தாண்டகத்திற்குபின் இரவு பிரம்ம முகூர்த்தத்தில் சிவஜோதியை (தேவர்களை) கண்டு தரிசித்தல், மேலும் ஒளிரூபமாக பார்வதி பரமேஸ்வரன் நமக்கு காட்சி அளிப்பதை நேரில் கண்டு அளவற்ற ஆனந்தம் அடைதல்.
16-07-19 சித்ரா பௌர்ணமி அன்று அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த அனைத்தையும் குணமளிக்கும் சக்தி நிறைந்த மானஸரோவர் தடாகத்தில் புனித நீராடி அல்லது ப்ரோச்சனம் செய்து, பார்வதி தேவிக்கு பூஜை செய்து, மானஸரோவர் கரையில் சிவனடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் சிறப்பு ஹோமம் திருமுறையின்படி நடைபெறும். அதன்பின் மூர்த்தங்கள், புனித நீர், மணல் எடுத்தல். மேலும் மானஸரோவர் கரையில் பார்வதி தேவிக்கு தீபம் ஏற்றி வழிபட்டபின் அடியார்கள் தங்களின் பிரார்த்தனைகளை அவரவர் விருப்பபடி நிறைவேற்றுதல். மானஸரோவர் தடாகத்தில் காணக்கிடைக்காத தேவ தேவதைகள் புனித நீராடுவதையும், பொன்னிற அன்னங்களையும் நாம் கண்டு தரிசிப்பதன் மூலம் உடல், மனம் சார்ந்த என்னற்ற அரிய பலன்களை இங்கு நீங்கள் உணரலாம். மானஸரோவரில் தாங்கள் கண்ட அதிசயங்கள் மற்றும் தங்களுக்கு அதிஅற்புதமாக கிடைத்த தரிசனத்தின் பேரானந்தத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் தார்ச்சன்கேம்ப் (கயிலையின் அடிவாரம்) சென்றடைந்து இரவு தங்குதல்.
17-07-19 முதல் நாள்: அதிகாலை சிவநமஸ்காரம் எனும் யோகபயிற்சிக்குபின் தார்ச்சன் கேம்ப்பிலிருந்து புறப்பட்டு அஷ்ட பர்வத், நந்தி பர்வத் (8 மலைகளுக்கு இடையே சிவனையும் நந்தியையும்) சென்று தரிசித்தல் (அனுமதியை பொருத்தே தரிசனம்). அதன்பின் நடைபயணமாக கிரிவலம் சென்று திரபுக் கேம்ப்பில் (வடக்கு முகத்தில்) இரவு தங்குதல்.
18-07-19 இரண்டாம் நாள்: அதிகாலை தேவ தேவர்கள் வலம் வந்துகொண்டும், ரிஷிகள் தவம் செய்துகொண்டும், சித்தர்களும் ஞானிகளும் வாழ்ந்துகொண்டும் இருக்கும் திரபுக் கேம்ப்பில் பொன்னார்மேனியனை (சுயம்பு லிங்கம்) தரிசனம் செய்தபின், அடியார்கள் அவரவர் பிரார்த்தனைக்கேற்ப ஸ்படிக லிங்கத்தை பொன்னார்மேனியனின் திருவடியில் சமர்பித்தல். மேலும் சூலாயுதம் ஊன்றி ஜோதியோடு ஜோதியாகும் பொன்னார்மேனியனுக்கு அகண்ட தீபம் (மகாதீபம்) ஏற்றி வழிபடுதல். இங்கு கண்கொள்ளா காட்சியாக ஒளிப்பிழம்பு உலகாள்வதையும், மஹாலிங்கம் பொன்னிறமாக மாறுவதையும் நாம் கண்டு தரிசிக்கலாம். மேலும் இங்கு விநாயகரை பிரதிஷ்டை செய்தபின், நடைபயணமாக கிரிவலம் செல்லும் வழியில் பார்வதி தேவி தவம் செய்த இடமான டோல்மாபாஸில் பார்வதிதேவியின் தரிசனம் கண்டபின் சிவகொடி (பிரார்த்தனை கொடி) ஏற்றி வழிபாடு செய்து, பார்வதி தேவி சிவபூஜைக்கு தீர்த்தம் எடுத்துச் சென்ற கௌரி குண்டத்தில் தீர்த்தம் எடுத்து, கிரிவலத்திற்குபின் ஜுதுல்புக் கேம்பில் இரவு தங்குதல்.
19-07-19 மூன்றாம் நாள்: அதிகாலை ஜுதுல்புக் கேம்ப்பிலிருந்து நடைபயணமாக புறப்பட்டு தார்ச்சன்கேம்ப் அடைந்து கிரிவலத்தை (பரிக்கிரமா) நிறைவு செய்தல். கிரிவலம் சென்றுவந்த சிவனருட் செல்வர்களை வணங்கி வரவேற்று, அவர்களுக்கு பாதபூஜை செய்து சிறப்பு விருந்தளித்தல். பின்பு அங்கிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் Saga சென்றடைந்து தங்குதல்.
20-07-19 Saga-விலிருந்து சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் Syaprobesi சென்றடைந்து இரவு தங்குதல்.
21-07-19 அதிகாலை Syaprobesi-லிருந்து புறப்பட்டு பாஸ்போர்ட் மற்றும் விசா பரிசீலனைக்குபின் சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் காட்மாண்டு வந்தடைதல். அன்று இரவு நடைபெறும் திருக்கயிலாய யாத்திரை நிறைவு விழாவில் ‘சிவாயநம’ எனும் ஐந்தெழுத்துப் பெருவேள்வியுடன் கயிலைமணி சான்றிதழ் வழங்கி கௌரவித்தல். மேலும் தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்து அளித்தல்.
22-07-19 காட்மண்டுவிலிருந்து அதிகாலை ஏசி ஹைடெக் பஸ் மூலம் டெல்லி புறப்படுதல்.
23-07-19 டெல்லி அடைந்து ஹோட்டலில் தங்குதல், பின்பு அவரவர் விருப்பம்போல் ஷாப்பிங் செய்தல் அல்லது ஓய்வெடுத்தல்.
24-07-19 ரயில் மூலம் டெல்லியிலிருந்து சென்னை புறப்படுதல்.
25-07-19 ரயில் பயணம்.
26-07-19 கயிலைநாதனும் பார்வதிதேவியும் தங்களின் இல்லத்திலும் இதயத்திலும் நிரந்தரமாக குடிவந்த பேரானந்தத்துடன் அவரவர் இல்லம் திரும்புதல்.