மயிலை திருவாசகப்பேரவை சேவை மனப்பான்மையுடனும்
இறை உணர்வோடும் நடத்தும் 18 ம்ஆண்டு
கைலாஷ்-மானஸரோவர், முக்திநாத் யாத்திரை-2017

வாழ்க்கையில் ஒரு முறையேனும் திருக்கயிலையில் சிவபெருமானையும் பார்வதிதேவியையும் நேரில் காணவும் மற்றும் முக்திநாத்தில் ஸ்ரீ சாளக்கிராம முக்திநாராயணனை தரிசிக்கவும், புனிதத்துவம் வாய்ந்த கைலாஷ், முக்திநாத் தரிசனத்தில் எழுச்சி மிக்க அபரிதமான சக்தியை நீங்கள் உணரவும் ஓர் அரிய வாய்ப்பு!

அனைத்தையும் குணமளிக்கும் சக்தி நிறைந்த மானஸரோவர் தடாகத்தில் புனித நீராடவும், பிரபஞ்ச எனர்ஜியை கயிலாயத்தில் பெறவும், சிவபெருமான் பார்வதிதேவியோடும், முப்பத்து முக்கோடி தேவர்களோடும் குடிகொண்டிருக்கும் திருக்கயிலையை நேரில் கண்டு தரிசிக்கவும், பொன்னார்மேனியனை (சுயம்பு லிங்கம்) தரிசனம் செய்யவும், மேலும் முக்திநாத்தில் விஷ்ணுவின் திருமேனிகளில் ஒன்றான முக்திநாராயணனை தரிசித்து, ஸ்ரீ ராமானுஜரின் 1000-வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெறும் 'ஓம் நமோ நாராயணாய' நாம ஜப வேள்வி மற்றும் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

கயிலை முதல் குமரி வரை என்பது பாரதத்தில் வழங்கப்படும் பக்திப் பழமொழி. யுகங்கள் தோன்றுவதற்கு முன்பே வெண்மை பொலிவாய் சுடரும் மலை கயிலை! வெள்ளி வெற்பு! ரசதகிரி,திருநொடித்தான் மலை, கௌரி சங்கரம், சிவவடிவம் என நெஞ்சை அள்ளும் திருப்பெயர்கள் பெற்றது கயிலை மலை! திருமுறை அருளாளர்கள் உருகிப் போற்றும் இமயம் சார்ந்த சிகரம் கயிலை!

கயிலையின் அமைப்போ பூகோள அளவிலும், கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு, பிரபஞ்சத்தை மனிதமும் அந்த பிரபஞ்சமும் தொடர்பு கொள்ளும் அளவில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டது. மனித உடலில் உள்ள 108 சக்கரங்களை தானாகவே இயங்க வைக்க உதவுகிறது. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு.இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்புக் கொள்ளக்கூடிய இடமாகவே சிவசக்தியால் உருவாக்கப்பட்டது. அதனால் தான் கயிலாயம் செல்வது மிகப் புண்ணியமான யாத்திரையானது.

அன்னை வடிவாய் மானஸரோவரும், தந்தை வடிவாய் வெள்ளி வெற்பும், மைந்தன் வடிவாய் கந்தன் குன்றும் மாண்புற விளங்கும் சுந்தரமலை கயிலை! என் அப்பனே எனச் சிவனை காரைக்கால் அம்மையார் கனிவுடன் அழைத்த மலை திருக்கயிலை! இத்தகு பெருமையுடைய கயிலையை ஒலிதரு கயிலை நாதனையே காணலாமே என்றார் நாவரசர்! நொடித்தான் மலை உத்தமனே என நடை பயின்ற நற்றமிழில் சாற்றினார் நம்பி அரூரர்! கைலாயருக்கு இமவான் அளித்த கனங்குழையே என்று உருகினார் அபிராமி பட்டர்! கயிலை வாசா! எங்கள் நேசா! என்கின்றனர் அடியார்கள்!

சக்தியின் வடிவமான மானஸரோவரை விட புனிதம் வாய்ந்த இடம் இவ்வுலகில் இல்லை என்பதால்தான் மகாத்மா காந்தியின் அஸ்தி இங்கு கரைக்கப்பட்டது.

இவ்வண்ணம் சிறக்கும் கயிலை தரிசனத்தை தங்கள் குடும்பத்தில் அனைவரும் காண வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

தாங்களும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் பிறவிபலன் அடைய இப்புனித யாத்திரையில் கலந்துக் கொண்டு, கிடைத்ததற்கரிய புண்ணியத்தையும், கயிலைநாதனின் அருளையும் முழுமையாக பெற அன்புடன் அழைக்கிறோம்