மயிலை திருவாசகப் பேரவை-Tamilnadu Brahmin Association சேவை மனப்பான்மையுடன் இணைந்து நடத்தும்

இலங்கை ராமாயண யாத்திரை-2018


சென்னையில் இருந்து யாத்திரை புறப்படும் நாட்கள்
ஏப்ரல் 22 மே 20 ஜூன் 24 ஜூலை 22
ஆகஸ்ட் 26 செப்டம்பர் 23 அக்டோபர் 21 நவம்பர் 25


புனித யாத்திரையின் விமான திருப்பயண விவரம் 22.04.2018 - 28.04.2018
நாள் 1 சென்னையிலிருந்து காலையில் ஸ்ரீராமர் மற்றும் சீதாதேவி துணையுடன் விமானம் மூலம் இலங்கை சென்றடைந்து, வரவேற்புக்குபின் எங்களது பிரதிநிதி தங்களை அன்புடன் வரவேற்று, பின்பு அங்கிருந்து முன்னேஸ்வரம் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்வார்.

முன்னேஸ்வரம் திருக்கோயிலின் சிறப்பம்சங்கள்: முன்னேசுவரம் அல்லது முன்னேஸ்வரம் இலங்கையில் உள்ள பழைமையான சிவன் கோயில்களில் காலத்தால் மிகவும் முற்பட்ட கோயில் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன முறையாய் அமைந்த இத்திருத்தலம் அழகேசுவரம் எனவும் வழங்கப்படுகின்றது. முன்னேசுவரம் கோயில் இலங்கையில் உள்ள ஐந்து பெரும் சிவாலயங்களில் (ஈசுவரங்களில்) ஒன்று. இக்கோயிலில் மக்கள் இன, சமய, மொழி வேறுபாடின்றி வழிபட்டு வருகின்றனர். இக்கோவில் பிரதேசத்தில் மொத்தம் ஐந்து கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஒரு பௌத்தக் கோவிலும் உள்ளது. முக்கியமானதும், பெரியதுமான சிவன் கோவிலில் வடிவாம்பிகா சமேதராக முன்னைநாதர் (சிவன்) உள்ளார். இதனைத் தவிர பிள்ளையார் கோவில், காளி கோவில், மற்றும் ஐயனார் (சிங்களத்தில் ஐயநாயக்கர்) கோவில்களும் உள்ளன. இராமாயண நிகழ்வுகளில் இக்கோயிலும் முக்கிய இடம் பெறுகிறது.    

பின்பு அங்கிருந்து மானாவாரி திருக்கோயில் சென்று தரிசித்தல்.    

மானாவாரி திருக்கோயிலின் சிறப்பம்சங்கள்: இராமன் சீதையை பிரிவதற்குமுன் வந்த தரிசித்த கோயில் என்ற பெருமை கொண்டது. தரிசனத்தின்போது இராமன் காணிக்கையாக அளித்த தங்கத்தால் ஆன சிவலிங்கமும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த புகழ்பெற்ற லிங்கம் ராமலிங்க சிவன் என்று அழைக்கப்படுகிறது.    

அதன் பின் திருகோண மலை சென்றடைந்து இரவு தங்குதல்.
நாள்2 காலை உணவிற்குபின் புகழ்பெற்ற திருக்கோணேஸ்ரம் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ சங்கரி தேவி சக்தி பீடம் சென்று திரிசித்தல்.

திருக்கோணேஸ் வரம் திருக்கோயிலின் சிறப்பம்சங்கள்: திருக்கோணேஸ்வரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது.    

ஸ்ரீ சங்கரி தேவி சக்தி பீடம்:ஸ்ரீ சங்கரி தேவி சக்தி பீடம் திருக்கோணமலையில் அமைந்தள்ளது. 16 ம் நூற்றாண்டில் போர்சுகீசியர்களால் இக்கோயில் இடிக்கப்பட்டது. இக்கோயிலில் இடம்பெற்றிருந்த அம்மன்சிலை தற்போது உள்ள கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.    

அதன் பின் அங்கிருந்து கண்டி சென்றடைந்து முக்கிய கோயில்களை சென்று தரிசித்தபின் இரவு கண்டியில் தங்குதல்.
நாள்3 காலை உணவிற்குபின் கண்டியின் முக்கிய சுற்றுலா தலங்களை பார்வையிடுதல்.

கண்டியின் சிறப்பம்சங்கள்:கண்டி இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. கண்டி இலங்கையின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாகும். இந்நகரம் மலைகளுக்கிடையே அமைந்துள்ளது. புத்தரின் புனிதப்பல் உள்ள தலதா மாளிகை இங்கேயே உள்ளது. இது பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாகும். இது 1988ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.    

அதன்பின் நுவரேலியா செல்லும் வழியில் அனுமன் திருக்கோயில் மற்றும் ராம் போடா நீர் வீழ்ச்சியை பார்வையிடுதல்.

பக்த அனுமன் திருக்கோயில்:அனுமன் இந்த மலையிலிருந்தே சீதையை தேடும் பணியை தொடங்கினார். ராவணனுக்கு எதிராக போராட ராமனுடைய படைகள் சிறப்புமிக்க ராம்போடாவில் தான் வந்து தங்கின. 16 அடி உயரமுள்ள அனுமன் சிலை இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.    

ராம் போடா நீர்வீழ்ச்சி:ராம்போடா என்றால் ராமனின் படை என்று பொருள். இச்சிறப்பு மிக்க ராம்போடாவில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி 109 மீ உயரம் உடைய இலங்கையின் 11வது பெரிய நீர்வீர்ச்சியாகும். ஹக்கல தாவரவியல் பூங்கா மற்றும் ஹார்டன் பிளேன்ஸ் தேசியப் பூங்கா போன்ற பிரபலமான சுற்றுலா தளங்களுக்கு அருகில் பசுமையான சூழலில் அமைந்துள்ளது.    

இரவு நுவரேலியாவில் தங்குதல்.
நாள்4 காலை உணவிற்கு பின் சீதா அம்மன் திருக்கோயிலுக்கு சென்று தரிசித்தல்.

சீதைஅம்மன்திருக்கோவில்: சீதை அம்மன் கோவில் இலங்கையின் மலையகத்தில் அமைந்துள்ள சீதைக்கான ஒரு கோவிலாகும். இக்கோவில் நுவரெலியா மாவட்டத்தில் சீதா எலிய என்ற இடத்தில் அமைந்துள்ளது. சீதா எலிய என்ற இவ்விடமே இராவணன் சீதையை சிறைப்பிடித்து வைத்திருந்த அசோகவனம் ஆகும். இராவணனின் யானையின் கால்தடங்கள் வட்ட அழுத்தங்களாக இவ்விடத்தில் காணப்படுகிறது. மேலும் அனுமனின் சிறிய மற்றும் பெரிய கால்தடங்களும் இவ்விடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.    

அதன் பின் கதிர் காமம் செல்லும் வழியில் திவுரும்புலா சென்று தரிசித்தல்.

திவுரும்புலா:திவுரும்புலா என்றால் சத்திய பிரமாணம் என்று பொருள். சீதை இராவணனிடமிருந்து மீட்கபட்ட பிறகு இவ்விடத்திலயே தன்னுடைய கண்ணியத்தை அக்னி பிரவேசத்தின் மூலம் மக்களுக்கு நிருபித்து காண்பித்தார்.    
அதன் பின் கதிர்காமம் சென்றடைந்து இரவு தங்குதல்.
நாள்5 காலை உணவிற்கு பின் கதிர்காமாவில் உள்ள புகழ் பெற்ற கதிர்காமம் திருக்கோயில் சென்று தரிசித்தல்.

கதிர்காமம் பெரிய கோவில்:கதிர்காமவில் கார்திகேய சுப்ரமணியக் கடவுளின் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்திராதேவி கார்த்திகேயனை இறுதி நாள் இராமாயண போரில் கலந்துகொள்ள அனுப்பினார். அவரே ராமனை ராவணனுடைய பிரமாஸ்தத்திலிருந்து காப்பாற்றினார். அவரின் நினைவாக இக்கோயில் இங்கு எழுப்பப்பட்டுள்ளது.    

அதன் பின் சுற்றுலா தலமான காலி சென்றடைந்து புகழ் பெற்ற சுற்றுலா தலங்களை பார்வையிட்ட பின் பென்டோட்டா சென்றடைதல். பென்டோட்டாவின் புகழ் பெற்ற நீர் விளையாட்டுகளில் பங்கு பெறுதல். இரவு பென்டோடாவில் தங்குதல்.
நாள்6 காலை உணவிற்குபின் பாலபிடிய சென்று புகழ்பெற்ற மடு நதியில் படகு சவாரி செய்தல். பின் கொஸ்கோடாவில் உள்ள டர்டில் ஹேச்சர் சென்று பார்வையிடுதல். அதன்பின் கொழும்பு சென்றடைந்து அங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களை பார்வையிடுதல்.

கொழும்பு:புகழ்பெற்ற பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் இங்கு அமைந்துள்ளது. இந்த கோயிலில்தான் ஆஞ்சநேயருக்கென்று ரதம் உள்ளது. மேலும் ராவணன் மறைவுக்கு பின் லட்சுமணனால் விபீஷன மன்னனுக்கு முடிசுட்டப்பட்ட இடமான களனியா சென்று பார்வையிடுதல். பாராளுமன்ற கட்டிடம், விகரமகாதேவி பூங்கா, அருங்காட்சியகம், சுதந்திர சதுக்கம், கங்காராமா திருக்கோயில் ஆகியவற்றை பார்வையிடுதல்.    


இரவு கொழும்புவில் தங்குதல்.
நாள்7 காலை உணவிற்கு பின் அவரவர் விருப்பபடி கொழும்புநகர சுற்றுலா, பின்பு கொழும்புவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைதல். ராமரும் சீதா தேவியும் நடந்த பாதைகளில் தாங்களும் நடந்த மகிழ்வுடனும், மேலும்ஸ்ரீராமரும் சீதாதேவியும் தங்களின் இல்லத்திலும் இதயத்திலும் நிரந்தரமாக குடிவந்த பேரானந்தத்துடனும் அவரவர் இல்லம் திரும்புதல்.