எங்களை பற்றி

கடந்த 17 ஆண்டுகளாக, தலவரலாறு மற்றும் சுறுங்கிய பொருளோடும், திருப்பதிகங்களின் வாயிலாக மே முதல் அக்டோபர் வரை ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கயிலையில் சிறப்பு தரிசனம், பிரதோஷம் அன்று கிரிவலம் சென்று மானஸரோவர் தடாகத்தில் புனித நீராட வைப்பது நாங்கள்தான் என்பதை இவ்வேளையில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

மேலும் கிரிவலம் மேற்கொள்ளும்போது தேவாரம், திருவாசகம், சிவபுராணம் முற்றோதல் மற்றும் தமிழ்வேத பாடல்கள் பாடி ஒவ்வொரு குழு சார்பாக, திரபுக்கில் (வடக்கு முகத்தில்) சூலாயுதம் ஊன்றி, சிவபூஜைக்குப்பின் கயிலை நாதனுக்கு அகண்ட தீபம் (மகாதீபம்), லட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்து விநாயகரை பிரதிஷ்டை செய்வதும் நாங்கள் மட்டும் தான்.

தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் கயிலையை தரிசனம் செய்வதற்கான வாய்ப்பு கயிலைநாதனின் அளவற்ற கருணையாலும், முன்னோர்களின் ஆசியாலும் கிடைத்துள்ளது என்பதை நாங்கள் நன்கு உணர்ந்து, ஆன்மிக உணர்வுடன், சேவை மனப்பான்மையுடனும் அனைத்து வசதிகளையும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு மேற்கொண்டுளோம். யாத்திரைகாலம் முழுவதும் நாங்கள் உடனிருந்து, தங்கள் உடல் நிலை மற்றும் சூழ்நிலை அறிந்து, அதற்கேற்றவாறு நிறைந்த சேவை புரிகிறோம்.

திருப்பயணத்திற்கான முன்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரயில் மற்றும் விமானப் பயணம் மேற்கொள்ள இருக்கும் சிவனடியார்கள், முன்னதாகவே பதிவு செய்து சலுகை கட்டணங்களைபெற வேண்டுகிறோம். மேலும் இவ்வருடம் அடியார்களின் வசதிக்காக காட்மண்டு மற்றும் லக்னோவிலிருந்து ஒவ்வொரு மாதமும் சாலை மற்றும் ஹெலிகாப்டர் மூலம் கயிலை நாதனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாத்திரை முடிந்தவுடன் 'கயிலைமணி' மற்றும் ‘வைணவமணி' சான்றிதழ்கள் தங்களுக்கு வழங்கப்படும். கடந்த வருடங்களில் எங்களது குழுவில் கலந்துக் கொண்ட அடியார்கள் தமிழக அரசின் மானியத் தொகையை பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம். அதைப் போலவே, இந்த வருடமும் கைலாஷ் யாத்திரைக்கு தமிழக அரசின் மானியத் தொகை ரூ.40,000, முக்திநாத் யாத்திரைக்கு தமிழக அரசின் மானியத் தொகை ரூ. 10,000 கிடைக்க ஆலோசனை வழங்கப்படும்.

மேற்கண்ட சான்றிதழுடன் மானியத்திற்கான விண்ணப்ப படிவம் வழங்கப்படும். யாத்திரையை முடித்ததற்கு ஆதாரமான பயணசீட்டுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு www.tnhrce.org என்ற இணையதளத்திலும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலக எங்களிலும் 044-28334822/11/12/13 தொடர்பு கொள்ள வேண்டுகிறோம் . பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, The Commissioner, The Hindu Religious Charitable Endowments Dept., 119, Uthamar Gandhi Salai, Nungambakkam, Chennai - 600 034 என்ற முகவரிக்கு யாத்திரை முடித்த ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டுகிறோம்


திருசிற்றிம்பலம்!


கடந்த 17 ஆண்டுகளாக, சுமார் 6000 சிவனருட் செல்வர்களை கயிலைநாதனையும்,
முக்திநாதனையும் நேரில் கண்டு தரிசிக்க அழைத்து சென்ற ஒரே நிறுவனம்

ஸ்ரீஅன்னபூரணி யாத்ரா சர்வீஸ்