மயிலை திருவாசகப் பேரவையும், ஸ்ரீஅன்னபூரணி யாத்ரா சர்வீசும் இணைந்து நடத்தும்

"நேபாள்-முக்திநாத் யாத்ரா -2019"


ஜுலை மாத முக்திநாத் புனித யாத்திரையின் ரயில் திருப்பயண விவரம்
03.07.2019 - 16.07.2019

03-07-19 சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலம் டெல்லி புறப்படுதல்.
04-07-19 ரயில் பயணம்.
05-07-19 டெல்லி அடைந்து ஹோட்டலில் தங்குதல், பின்பு அவரவர் விருப்பம்போல் முக்கிய கோயில்களை தரிசித்தல் அல்லது ஓய்வெடுத்தல்.
06-07-19 அதிகாலை டெல்லியிலிருந்து ஏசி ஹைடெக் பஸ் மூலம் காட்மண்டு புறப்படுதல்.
07-07-19 காட்மண்டு அடைந்தவுடன் அடியார்களுக்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின், முக்திநாத் திருப்பயணத்திற்கு தயாராகி இரவு தங்குதல்.
08-07-19 அதிகாலை சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் புறப்பட்டு முக்திநாத் செல்லும் வழியில் மனக்கமனா பகவதி தேவியை கேபிள் கார் மூலம் சென்று தரிசித்தபின் போக்ரா அடைந்து லேக்வியூவில் உள்ள ஹோட்டலில் இரவு தங்குதல்.
09-07-19 போக்ராவில் அதிகாலையில் ஸ்ரீஅன்னபூர்ணா சூரிய தரிசனத்திற்குபின் விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் ஜோம்சோம் அடைந்து, பின்பு அங்கிருந்து ஜீப்பில் பயணித்து வழியில் கண்டகிநதி, ஸ்ரீசாளக்கிராம தரிசனத்திற்குபின் முக்திநாத் திருக்கோயில் அடைதல், அங்கு 108 தீர்த்தங்கள் மற்றும் பாவ, புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, அடியார்களின் சுதர்சன ஹோமத்திற்குப்பின் வேதகோஷங்கள் முழங்கமுக்திநாராயணன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரங்கள் அணிவித்தல். அதன்பின் ஸ்ரீராமானுஜரின் 1002வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டுஅடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ‘ஓம்நமோநாராயணாய’ நாமஜபவேள்வியும், ஹரிநாம ஸங்கீர்த்தனமும் மற்றும் சங்கீத உபன்யாசமும் வெகுவிமர்சையாக நடைபெறும். அடியார்கள் சார்பாக லட்சதீபம் ஏற்றி முக்திநாதனை வழிபட்டபின் சாளகிராமம் பற்றி திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழிகூட்டுபாராயணம் நடைபெறும். பின்பு அவரவர் வேண்டுதலுக்கேற்ப கோவிலில் மணிகட்டி வழிபடுதல். அதன்பின் அனைத்து விதமான சாளகிராம மூர்த்திகளை கொண்டுள்ள திருக்கோயில், புத்தர்சிலை, ஜுவாலாமுகியை (அணையாஜோதி) தரிசித்துபின் ஜீப் மூலம் ஜோம்சோம் சென்றடைந்து இரவு தங்குதல்.
10-07-19 அதிகாலை ஜோம்சோமிலிருந்து விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் போக்ரா அடைந்து, அங்குள்ள டேவிஸ் பால்ஸ், ஃபீவாலேக் பார்த்தபின் பிந்துவாசினி, லேக்வராகி கோயில் மற்றும் குப்தேஸ்வர் குகைகோயில் தரிசனம் செய்து, பின்பு அங்கிருந்து சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் காட்மண்டு அடைந்து இரவு தங்குதல். இங்கு அடியார்களுக்கு வைணவ மணிசான்றிதழ் வழங்கி கௌரவித்தல். மேலும் தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்தளித்தல்.
11-07-19 அதிகாலையில் சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் பசுபதிநாதர் கோயில் சென்றடைந்து அங்கு பசுபதிநாதருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திற்குபின் அவரவரர் பிரார்த்தனைகளுக்கேற்ப தீபம் ஏற்றுதல். பின்பு முக்கியஸ்தலங்களான புத்தநீல்கண்ட் (ஜலநாராயணன்), சுயம்புநாத், குக்கேஸ்வரி சக்தி பீடம் மற்றும் புனித நதியான பாக்மதிநதி தரிசனம் செய்தல்.
12-07-19 காட்மண்டுவிலிருந்து அதிகாலை ஏசி ஹைடெக் பஸ் மூலம் டெல்லி புறப்படுதல்.
13-07-19 டெல்லி அடைந்து ஹோட்டலில் தங்குதல், பின்பு அவரவர் விருப்பம்போல் ஷாப்பிங் செய்தல் அல்லது ஓய்வெடுத்தல்.
14-07-19 ரயில் மூலம் டெல்லியிலிருந்து சென்னை புறப்படுதல்.
15-07-19 ரயில் பயணம்.
16-07-19 முக்திநாதன் தங்களின் இல்லத்திலும் இதயத்திலும் நிரந்தரமாக குடிவந்த பேரானந்தத்துடன் அவரவர் இல்லம் திரும்புதல்.
 

ஜுலை மாத முக்திநாத் புனித யாத்திரையின் விமான திருப்பயண விவரம்
07.07.2019 - 12.07.2019

07-07-19 சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி அடைந்து, பின்பு அங்கிருந்து விமானம் மூலம் காட்மண்டு சென்றடைதல், அங்கு அடியார்களுக்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின், முக்திநாத் திருப்பயணத்திற்கு தயாராகி இரவு தங்குதல்.
08-07-19 அதிகாலை சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் புறப்பட்டு முக்திநாத் செல்லும் வழியில் மனக்கமனா பகவதி தேவியை கேபிள்கார் மூலம் சென்று தரிசித்தபின் போக்ரா அடைந்து லேக்வியூவில் உள்ள ஹோட்டலில் இரவு தங்குதல்.
09-07-19 போக்ராவில் அதிகாலையில் ஸ்ரீஅன்னபூர்ணா சூரிய தரிசனத்திற்குபின் விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் ஜோம்சோம் அடைந்து, பின்பு அங்கிருந்து ஜீப்பில் பயணித்து வழியில் கண்டகிநதி, ஸ்ரீசாளக்கிராம தரிசனத்திற்குபின் முக்திநாத் திருக்கோயில் அடைதல், அங்கு 108 தீர்த்தங்கள் மற்றும் பாவ, புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, அடியார்களின் சுதர்சன ஹோமத்திற்குப்பின் வேதகோஷங்கள் முழங்கமுக்திநாராயணன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரங்கள் அணிவித்தல். அதன்பின் ஸ்ரீராமானுஜரின் 1002வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டுஅடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ‘ஓம்நமோநாராயணாய’ நாமஜபவேள்வியும், ஹரிநாம ஸங்கீர்த்தனமும் மற்றும் சங்கீத உபன்யாசமும் வெகுவிமர்சையாக நடைபெறும். அடியார்கள் சார்பாக லட்சதீபம் ஏற்றி முக்திநாதனை வழிபட்டபின் சாளகிராமம் பற்றி திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழிகூட்டுபாராயணம் நடைபெறும். பின்பு அவரவர் வேண்டுதலுக்கேற்ப கோவிலில் மணிகட்டி வழிபடுதல். அதன்பின் அனைத்து விதமான சாளகிராம மூர்த்திகளை கொண்டுள்ள திருக்கோயில், புத்தர்சிலை, ஜுவாலாமுகியை (அணையாஜோதி) தரிசித்துபின் ஜீப் மூலம் ஜோம்சோம் சென்றடைந்து இரவு தங்குதல்.
10-07-19 அதிகாலை ஜோம்சோமிலிருந்து விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் போக்ரா அடைந்து, அங்குள்ள டேவிஸ் பால்ஸ், ஃபீவாலேக் பார்த்தபின் பிந்துவாசினி, லேக்வராகி கோயில் மற்றும் குப்தேஸ்வர் குகைகோயில் தரிசனம் செய்து, பின்பு அங்கிருந்து சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் காட்மண்டு அடைந்து இரவு தங்குதல். இங்கு அடியார்களுக்கு வைணவ மணிசான்றிதழ் வழங்கி கௌரவித்தல். மேலும் தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்தளித்தல்.
11-07-19 அதிகாலையில் சூப்பர் டீலக்ஸ்பஸ் மூலம் பசுபதிநாதர் கோயில் சென்றடைந்து அங்கு பசுபதிநாதருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திற்குபின் அவரவரர் பிரார்த்தனைகளுக்கேற்ப தீபம் ஏற்றுதல். பின்பு முக்கியஸ்தலங்களான புத்தநீல்கண்ட் (ஜலநாராயணன்), சுயம்புநாத், குக்கேஸ்வரி சக்தி பீடம் மற்றும் புனித நதியான பாக்மதிநதி தரிசனம் செய்தல்.
12-07-19 முக்திநாத் யாத்திரையில் கலந்துகொண்ட அடியார்கள் ஸ்ரீசாளகிராமத்தில் முக்திநாதன் புனிதமாக உறைந்திருப்பதை நேரில் கண்டு தரிசித்த ஆனந்தத்துடன் அவரவர் இல்லம் திரும்புதல்.