ஸ்ரீ ராமானுஜரின் 1000வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு
மயிலை திருவாசகப் பேரவை சேவை மனப்பான்மையுடன் நடத்தும்

நேபாள்-முக்திநாத் யாத்திரை-2017
ஆகஸ்ட் மாத சாளக்கிராம முக்திநாராயணன் சிறப்பு தரிசனம்-2017


ஆகஸ்ட் மாத முக்திநாத் புனித யாத்திரையின் விமான திருப்பயண விவரம் 29.07.2017 - 04.08.2017
29.07.17
சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி அடைந்து, பின்பு அங்கிருந்து விமானம் மூலம் காட்மண்டு சென்றடைதல், அங்கு அடியார்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் இரவு தங்குதல்
30.07.17
காலை 8 மணிக்கு டீலக்ஸ் பஸ் மூலம் புறப்பட்டு பசுபதிநாதர்கோயில் சென்றடைந்து அங்கு பசுபதிநாதருக்கு அபிஷேகம் செய்தல். அதன்பின் ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா அவர்கள் வேதவித்வான்கள் குழுவினர்களுடன், தங்களின் முக்திநாத் யாத்திரை (தரிசனம்) சிறப்புடன் நடைபெற ஹோமம் நடத்தி யாத்ரா தானம் செய்து வைப்பார்கள். அதன்பின் முக்கிய ஸ்தலங்களான புத்த நீல்கண்ட்(ஜலநாராயணன்),சுயம்புநாத், பாக்மதி நதி, குக்கேஸ்வரி சக்தி பீடம் தரிசனம் செய்தல். அன்று இரவு ஸ்வாமிகண்ணன் பட்டாச்சார்யா அவர்கள் முக்திநாத் பயணம் பற்றி விரிவாக சிறப்புரையாற்றி ஒவ்வொரு அடியாருக்கும் ருத்ராட்சம்/துளசி மாலை மற்றும் இரட்சை அணிவித்து ஆசி வழங்குவார், பின்பு திருப்பயணத்திற்கு தயாராகி இரவு தங்குதல்.
31.07.17
காலை 8 மணிக்கு டீலக்ஸ் பஸ் மூலம் காட்மண்டுவில் இருந்து புறப்பட்டு வழியில் மனக்கமனா பகவதி தேவியை கேபிள் கார் மூலம் சென்று தரிசித்தல், பின்பு போக்ரா அடைந்து லேக் வியூவில் உள்ள ஹோட்டலில் இரவு தங்குதல்.
01.08.16
போக்ராவில் அதிகாலையில் ஸ்ரீ அன்னபூர்ணா சூர்ய தரிசனம் செய்து, பின்பு விமானம் அல்லது பஸ் மூலம் ஜோம்சோம் அடைந்து, பின் ஜீப்பில் பயணித்து வழியில் கண்டகி நதி, சாளக்கிராம தரிசனம் செய்து, பின் முக்திநாத் கோயில் அடைந்து, 108 தீர்த்தங்கள் மற்றும் பாவ, புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, அடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் சுதர்சன ஹோமத்திற்குப்பின் முக்திநாராயணன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரங்கள் அணிவித்தல். அதன்பின்ஸ்ரீ ராமானுஜரின் 1000வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு 'ஓம் நமோ நாராயணாய' நாம ஜப வேள்வியும், ஹரி நாம ஸங்கீர்த்தனமும் வெகுவிமர்சையாக நடைபெறும். மேலும் முக்திநாதனுக்கு லட்ச தீபம் ஏற்றி வழிபடுதல், சாளக்கிராமம் பற்றி திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி கூட்டு பாராயணம் நடைபெறும். பின்புஅவரவர் வேண்டுதலுக்கேற்ப கோவிலில் மணிகட்டி வழிபடுதல். அதன்பின் அனைத்து விதமான சாளகிராம மூர்த்திகளை கொண்டுள்ள திருக்கோயில், புத்தர் சிலை, ஜ்வாலாமுகியை(அணையா ஜோதி) தரிசித்து பின் ஜீப் மூலம் ஜோம்சோம் அடைந்து இரவு தங்குதல்.
02.08.16
காலை 6 மணிக்கு ஜோம்சோமிலிருந்து விமானம் அல்லது டீலக்ஸ் பஸ் மூலம் போக்ரா அடைந்து, அங்குள்ள டேவிஸ் பால்ஸ், பீவா லேக் பார்த்த பின் பிந்துவாசினி, லேக்வராகி கோயில் மற்றும் குப்தேஸ்வர் குகை கோயில் தரிசனம் செய்து, இரவு போக்ராவில் தங்குதல் அல்லது டீலக்ஸ் பஸ் மூலம் காட்மண்டு அடைந்து இரவு தங்குதல்.
03.08.16
வைணவமணி சான்றிதழ், தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்தளித்தல். போக்ரா/காட்மண்டுவில் ஓய்வு
04.08.16
காட்மண்டுவிலிருந்து முக்திநாதன் துணையுடன் விமானம் மூலம் மகிழ்வுடன் அவரவர் ஊர் புறப்படுதல்
   
ஆகஸ்ட் மாத முக்திநாத் புனித யாத்திரையின் ரயில் திருப்பயண விவரம் 25.07.2017 – 08.08.2017
25.07.17
சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலம் டெல்லி புறப்படுதல்.
26.07.17
ரயில் பயணம்.
27.07.17
டெல்லி அடைந்து ஹோட்டலில் தங்குதல், பின்பு அவரவர் விருப்பம்போல் முக்கிய கோயில்களை தரிசித்தல் அல்லது ஓய்வெடுத்தல்.
28.07.17
அதிகாலை டில்லியிலிருந்து ஏசி ஹைடெக் பஸ் மூலம் காட்மண்டு புறப்படுதல்.
29.07.17
காட்மண்டு அடைந்தவுடன் அங்கு அடியார்களுக்கு செல்வர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் இரவு தங்குதல்.
30.07.17
காலை 8 மணிக்கு டீலக்ஸ் பஸ் மூலம் புறப்பட்டு பசுபதிநாதர் கோயில் சென்றடைந்து அங்கு பசுபதிநாதருக்கு அபிஷேகம் செய்தல். அதன்பின் ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா அவர்கள் வேத வித்வான்கள் குழுவினர்களுடன், தங்களின் முக்திநாத் யாத்திரை (தரிசனம்) சிறப்புடன் நடைபெற ஹோமம் நடத்தி யாத்ரா தானம் செய்து வைப்பார்கள். அதன்பின் முக்கிய ஸ்தலங்களான புத்த நீல்கண்ட் (ஜலநாராயணன்), சுயம்புநாத், பாக்மதி நதி, குக்கேஸ்வரி சக்தி பீடம் தரிசனம் செய்தல். அன்று இரவு ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா அவர்கள் கைலாஷ் மற்றும் முக்திநாத் பயணம் பற்றி விரிவாக சிறப்புரையாற்றி ஒவ்வொரு அடியாருக்கும் ருத்ராட்சம்/துளசி மாலை மற்றும் இரட்சை அணிவித்து ஆசி வழங்குவார், பின்பு திருப்பயணத்திற்கு தயாராகி இரவு தங்குதல்.
31.07.17
காலை 8 மணிக்கு டீலக்ஸ் பஸ் மூலம் காட்மண்டுவில் இருந்து புறப்பட்டு வழியில் மனக்கமனா பகவதி தேவியை கேபிள் கார் மூலம் சென்று தரிசித்தல், பின்பு போக்ரா அடைந்து லேக் வியூவில் உள்ள ஹோட்டலில் இரவு தங்குதல்.
01.08.17
போக்ராவில் அதிகாலையில் ஸ்ரீ அன்னபூர்ணா சூர்ய தரிசனம் செய்து, பின்பு விமானம் அல்லது பஸ் மூலம் ஜோம்சோம் அடைந்து, பின் ஜீப்பில் பயணித்து வழியில் கண்டகி நதி, சாளக்கிராம தரிசனம் செய்து, பின் முக்திநாத் கோயில் அடைந்து, 108 தீர்த்தங்கள் மற்றும் பாவ, புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, அடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் சுதர்சன ஹோமத்திற்குப்பின் முக்திநாராயணன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரங்கள் அணிவித்தல். அதன்பின் ஸ்ரீ ராமானுஜரின் 1000வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு 'ஓம் நமோ நாராயணாய' நாம ஜப வேள்வியும், ஹரி நாம ஸங்கீர்த்தனமும் வெகுவிமர்சையாக நடைபெறும். மேலும் முக்திநாதனுக்கு லட்ச தீபம் ஏற்றி வழிபடுதல், சாளக்கிராமம் பற்றி திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி கூட்டு பாராயணம் நடைபெறும். பின்பு அவரவர் வேண்டுதலுக்கேற்ப கோவிலில் மணி கட்டி வழிபடுதல். அதன்பின் அனைத்து விதமான சாளக்கிராம மூர்த்திகளை கொண்டுள்ள திருக்கோயில், புத்தர் சிலை, ஜ்வாலாமுகியை (அணையா ஜோதி) தரிசித்து பின் ஜீப் மூலம் ஜோம்சோம் அடைந்து இரவு தங்குதல்.
02.08.17
காலை 6 மணிக்கு ஜோம்சோமிலிருந்து விமானம் அல்லது டீலக்ஸ் பஸ் மூலம் போக்ரா அடைந்து, அங்குள்ள டேவிஸ் பால்ஸ், பீவா லேக் பார்த்த பின் பிந்துவாசினி, லேக்வராகி கோயில் மற்றும் குப்தேஸ்வர் குகை கோயில் தரிசனம் செய்து, இரவு போக்ராவில் தங்குதல் அல்லது டீலக்ஸ் பஸ் மூலம் காட்மண்டு அடைந்து இரவு தங்குதல்.
03.08.17
வைணவமணி சான்றிதழ், தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்தளித்தல். போக்ரா/காட்மண்டுவில் ஓய்வு.
04.08.17
காட்மண்டுவிலிருந்து அதிகாலை ஏசி ஹைடெக் பஸ் மூலம் டில்லி புறப்படுதல்.
05.08.17
டில்லி அடைந்து ஹோட்டலில் தங்குதல், பின்பு அவரவர் விருப்பம்போல் ஷாப்பிங் செய்தல் அல்லது ஓய்வெடுத்தல்
06.08.17
ரயில் மூலம் சென்னை புறப்படுதல்.
07.08.17
ரயில் பயணம்.
08.08.17
முக்திநாதன் துணையுடன் சென்னை அடைந்து மகிழ்வுடன் அவரவர் இல்லம் திரும்புதல்..