மயிலை திருவாசகப் பேரவை-Tamilnadu Brahmin Association சேவை மனப்பான்மையுடன் இணைந்து நடத்தும்

நேபாள்-முக்திநாத் யாத்திரை-2018


ஏப்ரல் மாத சாளக் கிராம முக்தி நாராயணன் சிறப்பு தரிசனம்

ஏப்ரல் மாத முக்திநாத் புனித யாத்திரையின் விமான திருப்பயண விவரம் 16.04.2018 - 20.04.2018
16.04.18 சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி அடைந்து, பின்பு அங்கிருந்து விமானம் மூலம் காட்மண்டு சென்றடைதல். அங்கு அடியார்களுக்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின், முக்திநாத் திருப்பயணத்திற்கு தயாராகி இரவு தங்குதல்.
17.04.18 அதிகாலை சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் புறப்பட்டு பசுபதிநாதர் கோயில் சென்றடைந்து அங்கு பசுபதிநாதருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திற்குபின் அவரவர் பிரார்த்தனைகளுக்கேற்ப தீபம் ஏற்றுதல். அதன்பின் ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா அவர்கள் வேத வித்வான்கள் குழுவினர்களுடன், தங்களின் முக்திநாத் யாத்திரை தரிசனம் சிறப்புடன் நடைபெற ஹோமம் நடத்தி யாத்ரா தானம் செய்து, சிறப்புரையாற்றி ஒவ்வொரு அடியாருக்கும் துளசி மாலை மற்றும் இரட்சை அணிவித்து ஆசி வழங்குவார். அதன்பின் முக்திநாத் செல்லும் வழியில் மனக்கமனா பகவதி தேவியை கேபிள் கார் மூலம் சென்று தரிசித்தபின் போக்ரா அடைந்து லேக் வியூவில் உள்ள ஹோட்டலில் இரவு தங்குதல்.
18.04.18 போக்ராவில் அதிகாலையில் ஸ்ரீ அன்னபூர்ணா சூரிய தரிசனத்திற்குபின் விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் ஜோம்சோம் அடைந்து, பின் அங்கிருந்து ஜீப்பில் பயணித்து வழியில் கண்டகி நதி, ஸ்ரீசாளக்கிராம தரிசனத்திற்குபின் முக்திநாத் கோயில் அடைதல், அங்கு 108 தீர்த்தங்கள் மற்றும் பாவ, புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, அடியார்களின் சுதர்சன ஹோமத்திற்குப்பின் வேதகோஷங்கள் முழங்க முக்திநாராயணன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரங்கள் அணிவித்தல். அதன்பின் ஸ்ரீ ராமானுஜரின் 1001வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு அடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும்ஓம் நமோ நாராயணாயநாம ஜப வேள்வியும், ஹரி நாம ஸங்கீர்த்தனமும் மற்றும் சங்கீத உபன்யாசமும் வெகுவிமர்சையாக நடைபெறும். அடியார்கள் சார்பாக லட்ச தீபம் ஏற்றி முக்திநாதனை வழிபட்டபின் சாளகிராமம் பற்றி திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி கூட்டு பாராயணம் நடைபெறும். பின்பு அவரவர் வேண்டுதலுக்கேற்ப கோவிலில் மணி கட்டி வழிபடுதல். அதன்பின் அனைத்துவிதமான சாளகிராம மூர்த்திகளை கொண்டுள்ள திருக்கோயில், புத்தர் சிலை, ஜ்வாலாமுகியை (அணையா ஜோதி) தரிசித்து பின் ஜீப் மூலம் ஜோம்சோம் அடைந்து இரவு தங்குதல்.
19.04.18 அதிகாலை ஜோம்சோமிலிருந்து விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் போக்ரா அடைந்து, அங்குள்ள டேவிஸ் பால்ஸ், ஃபீவா லேக் பார்த்தபின் பிந்துவாசினி, லேக்வராகி கோயில் மற்றும் குப்தேஸ்வர் குகை கோயில் தரிசனம் செய்து, இரவு போக்ராவில் தங்குதல் அல்லது சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் காட்மண்டு அடைந்து இரவு தங்குதல். இங்கு அடியார்களுக்கு வைணவமணி சான்றிதழ் வழங்கி கௌரவித்தல். மேலும் தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்தளித்தல்.
20.04.18 முக்திநாதன் தங்களின் இல்லத்திலும் இதயத்திலும் நிரந்தரமாக குடிவந்த பேரானந்தத்துடன் அவரவர் இல்லம் திரும்புதல்
 
ஏப்ரல் மாத முக்திநாத் புனித யாத்திரையின் ரயில்திருப்பயண விவரம் 12.04.2018 - 24.04.2018
12.04.18 சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலம் டெல்லி புறப்படுதல்.
13.04.18 ரயில் பயணம்.
14.04.18 டெல்லி அடைந்து ஹோட்டலில் தங்குதல், பின்பு அவரவர் விருப்பம்போல் முக்கிய கோயில்களை தரிசித்தல் அல்லது ஓய்வெடுத்தல்.
15.04.18 அதிகாலை டெல்லியிலிருந்து ஏசி ஹைடெக் பஸ் மூலம் காட்மண்டு புறப்படுதல்.
16.04.18 காட்மண்டு அடைந்தவுடன் அங்கு அடியார்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் இரவு தங்குதல்.
17.04.18 அதிகாலை சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் புறப்பட்டு பசுபதிநாதர் கோயில் சென்றடைந்து அங்கு பசுபதிநாதருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திற்குபின் அவரவர் பிரார்த்தனைகளுக்கேற்ப தீபம் ஏற்றுதல். அதன்பின் ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யாஅவர்கள் வேத வித்வான்கள் குழுவினர்களுடன், தங்களின் முக்திநாத் யாத்திரை தரிசனம் சிறப்புடன் நடைபெற ஹோமம் நடத்தி யாத்ரா தானம் செய்து, சிறப்புரையாற்றி ஒவ்வொரு அடியாருக்கும் துளசி மாலை மற்றும் இரட்சை அணிவித்து ஆசி வழங்குவார். அதன்பின் முக்திநாத் செல்லும் வழியில் மனக்கமனா பகவதி தேவியை கேபிள் கார் மூலம் சென்று தரிசித்தபின் போக்ரா அடைந்து லேக் வியூவில் உள்ள ஹோட்டலில் இரவு தங்குதல்.
18.04.18 போக்ராவில் அதிகாலையில் ஸ்ரீ அன்னபூர்ணா சூரிய தரிசனத்திற்குபின் விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் ஜோம்சோம் அடைந்து, பின் அங்கிருந்து ஜீப்பில் பயணித்து வழியில் கண்டகி நதி, ஸ்ரீசாளக்கிராம தரிசனத்திற்குபின் முக்திநாத் கோயில் அடைதல், அங்கு 108 தீர்த்தங்கள் மற்றும் பாவ, புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, அடியார்களின் சுதர்சன ஹோமத்திற்குப்பின் வேதகோஷங்கள் முழங்க முக்திநாராயணன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரங்கள் அணிவித்தல். அதன்பின் ஸ்ரீ ராமானுஜரின் 1001வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு அடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ‘ஓம் நமோ நாராயணாய’ நாம ஜப வேள்வியும், ஹரி நாம ஸங்கீர்த்தனமும் மற்றும் சங்கீத உபன்யாசமும் வெகுவிமர்சையாக நடைபெறும். அடியார்கள் சார்பாக லட்ச தீபம் ஏற்றி முக்திநாதனை வழிபட்டபின் சாளகிராமம் பற்றி திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி கூட்டு பாராயணம் நடைபெறும். பின்பு அவரவர் வேண்டுதலுக்கேற்ப கோவிலில் மணி கட்டி வழிபடுதல். அதன்பின் அனைத்துவிதமான சாளகிராம மூர்த்திகளை கொண்டுள்ள திருக்கோயில், புத்தர் சிலை, ஜ்வாலாமுகியை (அணையா ஜோதி) தரிசித்து பின் ஜீப் மூலம் ஜோம்சோம் அடைந்து இரவு தங்குதல்.
19.04.18 அதிகாலை ஜோம்சோமிலிருந்து விமானம் அல்லது சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் போக்ரா அடைந்து, அங்குள்ள டேவிஸ் பால்ஸ், ஃபீவா லேக் பார்த்தபின் பிந்துவாசினி, லேக்வராகி கோயில் மற்றும் குப்தேஸ்வர் குகை கோயில் தரிசனம் செய்து, இரவு போக்ராவில் தங்குதல் அல்லது சூப்பர் டீலக்ஸ் பஸ் மூலம் காட்மண்டு அடைந்து இரவு தங்குதல். இங்கு அடியார்களுக்கு வைணவமணி சான்றிதழ் வழங்கி கௌரவித்தல். மேலும் தமிழக அரசின் மானியத் தொகை விண்ணப்ப படிவம் வழங்கி சிறப்பு விருந்தளித்தல்.
20.04.18 காட்மண்டுவிலிருந்து அதிகாலை ஏசி ஹைடெக் பஸ் மூலம் டெல்லி புறப்படுதல்.
21.04.18 டெல்லி அடைந்து ஹோட்டலில் தங்குதல், பின்பு அவரவர் விருப்பம்போல் ஷாப்பிங் செய்தல் அல்லது ஓய்வெடுத்தல்.
22.04.18 ரயில் மூலம் டெல்லியிலிருந்து சென்னை புறப்படுதல்.
23.04.18 ரயில் பயணம்.
24.04.18 முக்திநாதன் தங்களின் இல்லத்திலும் இதயத்திலும் நிரந்தரமாக குடிவந்த பேரானந்தத்துடன் அவரவர் இல்லம் திரும்புதல்