மயிலை திருவாசகப் பேரவையும், ஸ்ரீ அன்னபூரணி யாத்ரா சர்வீசும் இணைந்து நடத்தும் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில்

கைலாஷ்-மானஸரோவர், முக்திநாத் யாத்ரா - 2019


கயிலையின் நான்கு முகங்கள்

கயிலை மலையின் தோற்றங்களை நாம் நான்கு திசைகளிலும் பார்க்க முடிகிறது. உலகின் மையத்தில் இருக்கும் இந்த கயிலையே “மஹாமேரு” என்றும் அழைக்கப்படுகிறது.

கிழக்கு நோக்கிய “தத்புருஷம்” என்னும் முகம் மின்னல் போல் ஒளிவீசும் ஸ்படிகம் என்றும்

தெற்கு நோக்கிய “அகோரம்” என்னும் முகம் நீலக்கடலைப் போன்ற நீல ஒளிவீசும் நீலக்கல்லாகவும்

மேற்கு நோக்கிய “சத்யோஜாதம்” என்னும் முகம் செந்நிறம் கொண்ட மாணிக்ககல்லாகவும்

வடக்கு நோக்கிய “வாமதேவம்” என்னும் முகம் பளபளக்கும் தங்கமாகவும்

மேல் நோக்கிய “ஈசானம்” என்னும் முகம் கண்களை உறுத்தும் வெள்ளியாகவும் தோன்றுகிறது

 

மனிதனாகப் பிறந்த நம் அனைவருக்கும் இறைவனைக் காண வேண்டும் என்ற எண்ணம் மனதின் அடியிலே இருந்துகொண்டே இருக்கிறது. அந்த இறைவனாகிய எம்பெருமான் சிவனையும் பார்வதி தேவியையும் வாழ்க்கையில் ஒருமுறையேனும் கயிலையில் நேரில் தரிசித்து எல்லையில்லாப் பேரின்ப நிலை அடையவும், மேலும் இந்த யாத்திரையின் மூலம் எழுச்சி மிக்க அபரிதமான ஆயுளை நீடிக்கச் செய்யும் சகல சக்திகளும் நிறைந்த பிரபஞ்ச சக்தியை நீங்கள் நேரில் பெறவும், மகிமைகொண்ட பிரபஞ்ச தெய்வீக நடனமான (Cosmic Dance) சிவதாண்டவத்தை நேரில் தரிசிக்கவும் ஓர் அரிய வாய்ப்பு!

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று அனைத்தையும் குணமளிக்கும் சக்தி நிறைந்த மானஸரோவர் தடாகத்தில் புனித நீராடி சிவபூஜைக்குபின் திருமுறைகள் முழங்க, கயிலாய வாத்தியங்கள் இசைக்க, சங்கு நாதம் ஒலிக்க, தமிழ் வேதங்களுடன், அடியார்கள் ஆனந்த நடனமாடிட, சகல பரிவாரங்களும் அசைந்து வர, வரலாறு பதிவு செய்யும் விதமாக அடியார்கள் ஒருங்கிணைந்து நடத்தும் மாபெரும் இந்துக்களின் இறைநெறியான திருவாசகம் முற்றோதலுடன் கூடிய இந்த யாத்திரையின் மூலம் நமக்குள்ளே இருக்கும் பிரபஞ்சம் தூண்டப்படவும், ஆற்றல் மிக்க பாசிடிவ் காஸ்மிக் எனர்ஜி நம்முள் பிரவேசித்து பிரதிபலிப்பதை நிதர்சனமாக உணர்ந்து தெய்வீக பேரின்ப நிலையை அடையவும், சிவபெருமான் பார்வதிதேவியோடும், முப்பத்து முக்கோடி தேவர்களோடும் குடிகொண்டிருக்கும் திருக்கயிலையை நேரில் கண்டு தரிசிக்கவும், பொன்னார்மேனியனை (சுயம்பு லிங்கம்) தரிசனம் செய்யவும், மேலும் முக்திநாத்தில் சன்மார்க நெறியாளர், சமய புரட்சியாளர், மகான் ஸஸ்ரீ ராமானுஜரின் 1002வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெறும் ‘ஓம் நமோ நாராயணாய’ நாம ஜப வேள்வி, ஹரி நாம ஸங்கீர்த்தனம் மற்றும் பக்தி உபன்யாசத்தில்கலந்துகொள்ள இம்மாபெரும் புனிதப்பயணத்தை தாங்கள் மேற்கொள்ள இருப்பது குறித்து எல்லையில்லா மகிழ்ச்சியடைகிறோம்.

தினம் தினம் தேவ தேவர்கள் வலம் வந்துகொண்டும், ரிஷிகள் தவம் செய்துகொண்டும், சிவகணங்கள் வாழ்ந்துகொண்டும் இருக்கும் திருக்கயிலையில் காணக்கிடைக்காத பல அரிய தரிசனங்களை நாம் பெறலாம். கயிலை தரிசனத்தில் ஒளிப்பிழம்பு உலகாள்வதையும், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு முகங்களின் தரிசனத்தையும், தேவ தேவதைகள் மானஸரோவர் தடாகத்தில் புனித நீராடுவதையும், மஹாலிங்கம் பொன்னிறமாக மாறுவதையும், சிதம்பர பொற்கோயிலையும், பொன்னிற அன்னங்களையும் கயிலையில் நாம் கண்டு தரிசிக்கலாம்.

கயிலையில் மட்டுமே சிவனில் நாம் இருப்பதையும் சிவன் நம்முள்ளே இருப்பதையும் உணரலாம்.
 

உலகின் மையப்பகுதியான கயிலையின் அமைப்போ பூகோள அளவிலும், கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு, பிரபஞ்சத்தை மனிதனும் அந்த பிரபஞ்சமும் தொடர்பு கொள்ளும் அளவில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித உடலில் உள்ள 108 சக்கரங்களை தானாகவே இயங்க வைக்க உதவுகிறது. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு.

இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்புக் கொள்ளக்கூடிய இடமாகவே சிவசக்தியால் உருவாக்கப்பட்டதுதான் திருக்கயிலை. அதனால் தான் கயிலாயம் செல்வது யாத்திரைகளிலேயே மிகப் புண்ணியமான யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. நூறு பிறவிகள் எடுத்து பரமனையே பாடிப் பரவினாலும் கோடியில் ஒருவருக்குத்தான் திருக்கயிலை தரிசனம் கிடைக்கும். அது தங்களுக்கு கிடைத்துள்ளது.

திருக்கயிலையானது உடல் ஆரோக்கியத்திற்கான தலம் ஆகும். உள்ளம் தூய்மையடையவும், உடல் ஆரோக்கியம் பெறவும், எண்ணம் மாசற்று இருக்கவும், அறம் செய்வதிலும் அன்பு செலுத்துவதிலும் அளவற்று செயல்படவும், மனநோய் உட்பட பல நோய்களை வெல்லவும், ஆரோக்கியம் மேம்பட அறனின் அருளைப் பெறவும், சிவனருள் பெற்று சிந்தை தெளியவும் திருக்கயிலைக்கு வாழ்நாளில் ஒருமுறையேனும் செல்வோம். இவ்வண்ணம் சிறக்கும் காணக்கிடைக்காத திருக்கயிலை தரிசனத்தை தங்கள் குடும்பத்தில் அனைவரும் காண வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

யாத்திரையில் கலந்துகொள்ளும் அனைத்து அடியார்களும் கிரிவலத்திலும் கலந்துகொள்ள தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்